Published : 08 Apr 2024 06:06 AM
Last Updated : 08 Apr 2024 06:06 AM

சிறந்த செவிலியர் விருதுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி அறிவிப்பு

சென்னை: உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி சார்பில் கிராம சுகாதார செவிலியர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு சிறந்தசெவிலியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு சிறந்த செவிலியர் விருதுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி இயக்குநர் மருத்துவர் அ.மகாலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், கிராம பெண்களுக்கும் ஒரு தொடர்பு பாலமாக இருப்பவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள். கிராம பெண்கள் கருவுற்றது முதல் குழந்தைபேறு, தொடர் கவனிப்பு, தடுப்பூசி என பல தாய்சேய் நல திட்டங்களை செவிலியர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

ரத்த சோகை வராமல்.. மேலும், தங்கள் பகுதியில் உள்ள கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்து, உணவுமுறை குறித்து அறிவுரையை கூறி, பேறுகாலத்தில் ரத்த சோகைவராமலும் பார்த்துக் கொள்வது செவிலியர்களின் பணிகளில் முக்கியமானது. அதனால்,உலக செவிலியர் தினத்தையொட்டி கிராம சுகாதார செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, மே மாதம் 5-ம் தேதி சென்னையில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை 9710485295 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது mahali@mahali.in என்ற இமெயிலை தொடர்பு கொள்ளலாம்.

ஏப்ரல் 20-ம் தேதி மாலை 5 மணி வரை வரும்விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிபுணர்கள் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, மதிப்பீடு செய்து 20 சிறந்த செவிலியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையில் இருக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் சிறந்த செவிலியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x