

ஒட்டன்சத்திரம்: இண்டியா கூட்டணிக்கு எதிராக பாஜக அரசு ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து, ஒட்டன்சத்திரத்தில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடை பெற்றது. திமுக நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிரகாஷ் காரத் பேசிய தாவது: பாஜக அரசு ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டை ஒரே கட்சிதான் ஆட்சிசெய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அதனால், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலைகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, இண்டியா கூட்டணிக்கு எதிராக பாஜக அரசு ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. இரு மாநில முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது, இண்டியா கூட்டணி மற்றும் இந்திய மக்களுக்கு எதிராக மிகப்பெரிய சதியை அரங்கேற்றி வருகிறது.
பாஜக அரசு மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை, மதச்சார்பற்ற நாடான இந்தியாவை பாதுகாப் பதற்கான தேர்தல். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர், ஆதிவாசி மக்களுக்கு எதிரான கொள்கை களை பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சட்டப் பூர்வமாக குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப் பதற்குக் கூட மோடி அரசு தயாராக இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக விவசாயி களை வஞ்சித்து வருகிறது.
தற்போது, வேலைவாய்ப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருகிறது. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. தமிழகத்தில் ஆளுநரை விட்டு பல துறைகளிலும் தலையீடு செய்கிறது. இதேபோல்தான் கேரளாவிலும் நடந்து வருகிறது. மாநிலங்களுக் குரிய நிதியைத் தராமல் நிறுத்துகிறது. பாஜக அரசின் பல்வேறு அச்சு றுத்தல்களுக்கு எதிராக இந்தத் தேர்தலில் மகத்தான தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, அவர் பழநியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.