புதிய விலையில் பழைய மதுபாட்டில்கள்: விலை குளறுபடியால் டாஸ்மாக் கடைகளில் வாக்குவாதம்

புதிய விலையில் பழைய மதுபாட்டில்கள்: விலை குளறுபடியால் டாஸ்மாக் கடைகளில் வாக்குவாதம்
Updated on
2 min read

டாஸ்மாக் மதுக் கடைகளில் மது பானங்களின் விலை புதன்கிழமை முதல் ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி மதுபானங்களின் வகைகளைப் பொறுத்து குவார்ட்டர் அளவு பாட்டில்கள் ரூ. 10 முதல் ரூ. 120 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பழைய பாட்டில்களில் உள்ள விலை யைக் கொண்டு புதிய விலையை நிர்ணயித்து விற்பனை செய்யுமாறு மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பழைய பாட்டில்களுக்கு புதிய விலை வைத்து விற்பனை செய்யப்படுவதற்கு வாடிக்கை யாளர்கள் அதிருப்தி தெரி விக்கின்றனர். இதனால், பெரும் பாலான மதுக்கடைகளில் மேற் பார்வையாளர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நடக்கின்றன.

இது குறித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் கோவை மாவட்டத் தலைவர் மூர்த்தி கூறியதாவது: ’’டாஸ்மாக் மது விலை ஏற்றப்படும் என அரசாணை வெளியிட்ட அரசு, திடீரென எவ்வித அறிவிப்பும் இன்றி செவ்வாய்க்கிழமை மாலை அழைத்து, புதன்கிழமை முதல் விலை ஏற்றம் செய்யப்படுகிறது எனத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 6,800 கடைகளிலும் உள்ள இருப்புகள் குறித்து கணக்கீடு செய்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் மண்டல அலுவல கத்தில் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து, அவசரம் அவசரமாக இருப்புகள்குறித்த கணக்கெடுத்து புதன்கிழமை அதிகாலைக்குள் கொண்டுசென்று ஒப்படைத்தோம். தற்போதைய நிலையில், கடைகளில் பழைய விலை பட்டியல்களுடன் ஏராள மான சரக்குகள் இருப்பு உள்ளது.

அதனை புது விலையுடன் விற்கு மாறு நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது. ஆனால், வாடிக்கை யாளர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பி சண்டையிடுகின்றனர். அனைத்துக் கடைகளிலும் புதன் கிழமை ஒரே தகராறு மயமாகதான் இருந்தது. தற்போதைய இருப் பைப் பார்க்கும்போது நிச்சயம் இந்த பாட்டில்கள் விற்றுத் தீர்வ தற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிவிடும். அதுவரை எங்களது பாடு திண்டாட்டம்தான்.

நாங்கள், விலையை அதிகம் வைத்து ஏமாற்றுவதுபோல வாடிக் கையாளர்கள் நினைத்து தாறு மாறாகத் திட்டுகின்றனர். சரியாகத் திட்டமிட்டு பழைய சரக்குகளின் மீது புதிதாக விலைப் பட்டியலை ஒட்டித் தந்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. பல கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருமானம் வர உள்ளது. ஆனால், திட்டம் இல்லாமல் செயல்படுகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். கூட்டத்தில் முடிவு எடுத்து அதிகாரிகளிடம் கோரிக்கையாக தெரிவிக்க உள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரசீர் அலி கூறும்போது, ’’அரசு ஏற்கெனவே அரசாணை வெளி யிட்டுள்ளது. அனைத்து மதுக் கடைகளிலும் சுவர்களில் புதிய விலைப் பட்டியலை ஒட்டி வைக்குமாறு தெரிவித்துள்ளோம். பழைய மது பாட்டில்கள் இருப்பு உள்ளவரை புதிய விலை யில் விற்பனை செய்யச் சொல்லி யுள்ளோம். புது பாட்டில்கள் கோவாவில் இருந்து 15 நாட்களுக் குள் வந்துவிடும். அதன்பின்னர், இந்த பிரச்சினை இருக்காது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in