தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய கரூர் எம்.பி ஜோதிமணி! 

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய கரூர் எம்.பி ஜோதிமணி! 
Updated on
1 min read

கரூர்: சொந்த ஊரில் பிரச்சாரம் செய்தபோது மறைந்த தாயை நினைத்து கண் கலங்கினார் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்.பி.

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அரவக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான பெரியதிருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மக்களிடம் வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது ஜோதிமணி பேசியது: ''நான் அத செஞ்சே, இத செஞ்சேன்னு ஓட்டு கேட்க வேண்டியதில்லை. நான் 4 ஆண்டுகள் 9 மாதம் 24 நாள் மக்களவை உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன்.

என்னால முடிந்த வரை சிறப்பாக பணியாற்றி இருக்கறேன். பல நேரங்களில் இரவில் தான் ஊருக்கு வந்து செல்லவேண்டி உள்ளது. அந்தளவுக்கு பணிச் சுமை இருக்கிறது. அம்மா இருந்தாங்கன்னா அந்த பணிச் சுமை....'' என்றவர், சில நிமிடங்கள் பேச முடியாமல் தாயின் நினைவுகளால் கண்களை மூடி கலங்கினார்.

அதன்பின் கண்ணீரை துடைத்து கொண்டு, ''அந்த பணிச் சுமை தெரிந்திருக்காது. நீங்கள்தான் எனக்கு குடும்பம் மாதிரி இத்தனை நாள் இருந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் நன்றி'' என்றார். தாயை நினைத்து ஜோதிமணி கண்கலங்கியது வாக்காளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in