கோடை வெயில் தாக்கம்: தமிழகத்தில் மின் நுகர்வு உச்சம்

கோடை வெயில் தாக்கம்: தமிழகத்தில் மின் நுகர்வு உச்சம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டிவதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது.

குறிப்பாக நடப்பாண்டு மார்ச் 29-ம் தேதி 42.64 கோடி யூனிட்டாக மின் நுகர்வு அதிகரித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், ஐபிஎல் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து கடந்த 2-ம் தேதி 43.01 கோடி யூனிட் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் (ஏப்.3) மின் நுகர்வு 43.58 கோடி யூனிட் என்னும் உச்சத்தை அடைந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in