

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரம் (ஈவிஎம்),விவிபாட், கட்டுப்பாட்டு இயந்திரம் என்ற புதிய இணைப்பு முறையில் உள்ள சந்தேகத்தை தேர்தல் ஆணையம் போக்க வேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறிய தாவது:
நீதிமன்றம் வழிகாட்டும்:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ராகுல் காந்தி உட்பட அனைவரும் பேசும்போது, திமுக தொண்டர்களுக்கு அச்சம் உருவாகியுள்ளது. இதைப் போக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அதை ஆணையம் செய்யாததால், உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல; இனி வரும் தேர்தல்களும் முறையாக நடைபெற வேண்டுமானால், திமுக தொடர்ந்த வழக்கு வழிகாட்டும் அளவுக்கு பல கோரிக்கைகளை வைத்துள்ளோம். நீதிமன்றம் வழிகாட்டும் என நம்புகிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தரப்படும் ‘இன்புட் சிக்னல்’ கட்டுப்பாட்டு இயந்திரத்தில்தான் முதலில் சேமிக்கப்படவேண்டும். ஆனால், தற்போது இரண்டுக்கும் இடையில் ஒப்புகை சீட்டு (விவிபாட்) இயந்திரத்தை வைப்பதால், அந்த இயந்திரத்தில் புதிதாக எஸ்எல்யு எனப்படும் இயந்திரத்தை இணைக்கின்றனர்.
கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவை கணினி மூலம் குலுக்கல் செய்யப்பட்டு பிரிக்கப்படுகின்றன.
தயாரிப்பு நிறுவனத்தில்... ஆனால், எஸ்எல்யு எனப்படும் அந்த இயந்திரம் இவ்வாறு பிரித்து அனுப்பப்படுவதில்லை. அந்த இயந்திரத்தை தேர்தலுக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் முன்னதாக, அதைத் தயாரித்தவர்கள்தான் பொருத்துகின்றனர்.
வாக்காளர் மின்னணு இயந்திரத்தில் வாக்கு செலுத்தும்போது அது விவிபாட் இயந்திரத்துக்கு சென்று அதன்பின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கு செல்கிறது.
இது சந்தேகத்தைஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த விவிபாட் இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் பாஜகவினர் நியமிக்கப்பட்டதும் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்து கிறது.
விவிபாட் தலைமுறை 2 இயந்திரம் என்பது கடைசியாக வைக்கப் பட்டு. கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான படங்களையும் இணைத்தேநாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். தற்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் வாக்கு, முதலில் விவிபாட் அதன்பின் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாவதுதான் சந்தேகத்தை ஏற் படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடமை: இதுதவிர, தேர்தல் ஆணையர்களாக இருவர் அவசரமாக நியமிக்கப்பட்டதும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சந்தேகங்களைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. எங்களது கோரிக்கை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் நேரடியாக விவிபாட் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.