Published : 04 Apr 2024 04:00 AM
Last Updated : 04 Apr 2024 04:00 AM
விருத்தாசலம்: அதிமுக தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். உங்களுக்கென்று பிரதமர் வேட்பாளர் கிடையாது. திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக திட்டக்குடியில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “கடலூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் போட்டி யிடுகிறார். அவரை இந்தத் தொகுதிக்கு யார் வரச்சொன்னது? தங்கர் பச்சான் உங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இத்தொகுதியில் போட்டியிடும் மற்றொரு ( தேமுதிக ) வேட்பாளர் சிவக்கொழுந்து. பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏவான இவர், தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? தங்கர் பச்சான் அடிப்படையில் விவசாயி, சிறந்த படைப்பாளர், உங்களுக்காக உழைக்கக் கூடியவர்.
சீரழிக்கும் இரு கட்சியினர்: திமுக, அதிமுக என இரு கட்சிகளும் நாட்டை சீரழித்து வரு கின்றன. இந்த இரு கட்சிகளால் தமிழகத்தின் நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. நாம் ஆட்சிக்கு வர வேண்டும்; அப்போது தான் இந்த மோசமான நிலை மாறும். நாங்கள் ஏதோ துரோகம் செய்தது போல், ஸ்டாலினும், பழனிசாமியும் ராமதாஸை விமர்சனம் செய்து வருகின்றனர். நாங்கள் உங்களுக்கு எப்போது துரோகமிழைத் தோம்? மாறாகஉங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம். திமுகவையும், அதிமுகவையும் ஒவ்வொரு முறையையும் தோளில் சுமந்து வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம்.துரோகம் எங்கள் பரம்பரையிலே கிடையாது
நாங்கள் பாட்டாளிகள்! மற்றவர்களுக்கு உயிர் கொடுத்தவர்கள்; நாங்கள் தியாகம் செய்தவர்கள். ஆனால் நீங்கள் துரோகம் செய்தவர்கள். வன்னியர் இட ஒதுக்கீடு, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணியை 2026-ல் அமைப்போம். அதிமுக தொண்டர்கள் தங்கள்வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கென்றுபிரதமர் வேட்பாளர் கிடையாது.உங்களின் எதிரி திமுகதான். எனவே, திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண் டும்” என்று தெரிவித்தார்.
‘என் மச்சான் டெபாசிட் இழக்க வேண்டும்’: இக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “விஷ்ணு பிரசாத் எனது மைத்துனர் தான். அவர் எனது மைத்துனராகவே இருந்தாலும், அவர் டெபாசிட் இழக்க வேண்டும். விஷ்ணு பிரசாத் கல்யாண மண்டபம் மாறி வந்துள்ளார். அவருக்கான கல்யாண மண்டபம் ஆரணி தொகுதியில் உள்ளது. இது கடலூர் மண்டபம்; இங்கு நமது மாப்பிள்ளை தங்கர் பச்சான் தான். எனக்கு மச்சான் வேண்டாம்; உலகறிந்த இந்த பச்சான் போதும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT