“ஜெயலலிதாவின் இடத்தில் மோடி இருக்கிறார்” - டிடிவி தினகரன் கருத்து

தென்காசியில் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த டிடிவி. தினகரன்
தென்காசியில் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த டிடிவி. தினகரன்
Updated on
1 min read

“ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்” என்று, டிடிவி. தினகரன் தெரிவித்தார். தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜய சீலனை ஆதரித்து, வைகுண்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக அதலபாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் 5-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். தற்போது பாஜக கூட்டணிக்கு நீங்கள் கொடுக்கும் வெற்றி, 2026-ல் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் விரோத ஆட்சியை ஒழித்து, துரோகிகளையும் ஓரம்கட்டி, மக்களாட்சியை உருவாக்க அடித்தளமாக அமையும் என்றார்.

குற்றாலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேனியில் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார். 5-ம் தேதி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வாக்கு சேகரிக்கிறார் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in