அமித் ஷா நாளை மதுரை வருகை - தென்மாவட்டங்களில் பிரச்சாரம்

அமித் ஷா நாளை மதுரை வருகை - தென்மாவட்டங்களில் பிரச்சாரம்
Updated on
1 min read

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (ஏப். 4) மதுரை வருகிறார். தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள போலீஸார் கூறும்போது, அமித்ஷா 4, 5-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு வருகிறார். தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும் பழங்காநத்தத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. எனினும் அமித் ஷா பயணத் திட்டம் குறித்த முழுமையான விவரம் இன்றுதான் (ஏப். 3) தெரியும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in