

ராமேசுவரம்: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறினார்.
கச்சத்தீவு விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிஉள்ள நிலையில், இலங்கையின் நீர் வழங்கல்மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கச்சத்தீவு விவகாரம் குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. மேலும், கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்தும் இந்தியாவிடமிருந்து எந்த கோரிக்கையும் எழவில்லை. கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கச்சத்தீவு குறித்து இந்தியாவிடமிருந்து ஏதேனும் கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை பதில் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.