Published : 03 Apr 2024 06:15 AM
Last Updated : 03 Apr 2024 06:15 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தின் மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம்சார்பில் பல்வேறு விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்.19-ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று 100% வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறு ஏப்.19-ம் தேதி வாக்காளர்கள் வாக்கு அளித்துவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப். 20-ம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5% தள்ளுபடி செய்யப்படும்.
இதற்கு செங்கல்பட்டு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ்கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT