

சென்னை: பொதுசுகாதாரத் துறை இயக்குநர்செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் வெயிலின்தாக்கம் அதிகரிக்கும் என்பதால்,அந்த நேரங்களில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது.
அதைத் தடுக்க, சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து பொது சுகாதாரத் துறையினர் அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மின் அழுத்தத்தை சரி செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசரசிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்துஇடங்களில் மின் அழுத்தம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவமனை கட்டமைப்பானது தீ விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில், தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால்,நோயாளிகள், பணியாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிமுறை களையும் வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.