

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் யு.பி.ஐ மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால், ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.ரயில்களில் பயணம் மேற்கொள்வோர் பெரும்பாலும் முன்கூட்டியே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பார்கள்.
முன்பதிவில்லாத டிக்கெட்: கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுபவர்கள், முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆகியோர்முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்பார்கள். முன்பதிவு டிக்கெட் பொறுத்தவரை இணையதளம் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. அதேநேரம், முன்பதிவில்லாத டிக்கெட் பெற ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க வேண்டும்.
முன்பதிவில்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலமாக, இணையதளத்தில் எடுக்கும் வசதிஉள்ளது. அதேநேரத்தில், முன்பதிவில்லாத டிக்கெட்களை கவுன்ட்டரில் எடுத்தால், பணத்தை கொடுத்துஎடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இங்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, இந்தியாவில் மத்தியரயில்வே உள்பட பல்வேறு ரயில்வேயில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை (யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி) ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.
இதன்மூலம், பணத்தைசெலுத்தாமல் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில் யுபிஐ மூலம் ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை அனுப்பி விடலாம். தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களில் டிஜிட்டல்பணபரிவர்த்தனை முறை ஏற்கெனவே பயன்பாட்டில் இருக் கிறது.
இதுதவிர, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் உள்பட சில முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் இந்தவசதி இருக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் மேலும் சில முன்பதிவில்லாத கவுன்ட்டர்களில் சோதனை அடிப்படையில் இந்தவசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மற்ற கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்களில் படிப்படியாக இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.