

தேவகோட்டை: ‘‘பாஜகவை எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை’’ என முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கருணாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசியதாவது: மக்கள் நலன் மீது அக்கறை உள்ள பாரம் பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர் கார்த்தி சிதம்பரம். ஜிஎஸ்டியால் தான் விலை வாசி உயர்ந்துள்ளது. வரியை வசூலித்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல், அம்பானி, அதானி போன்றோருக்கு கொடுக்கின்றனர். பல கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் கொடுத்துள்ளனர்.
அவர்கள் ஏமாற்றிவிட்டு வெளி நாடுகளுக்கு சென்று விட்டனர். பாஜகவினர் பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் உண்மையாகும் என நினைக் கின்றனர். அது வடமாநிலங்களில் எடுபடும். ஆனால், தமிழ்நாட்டில் எடுபடாது. எங்களை போன்றவர்களிடம் வரியை வசூலித்து மக்களுக்கு செலவழிப்பது கிடையாது. வேட்டி கட்டி ‘ரோடு ஷோ’ நடத்தினால் மட்டும் போதாது. ஒத்த மனநிலை உடைய ஆட்சி அமைந்தால் முதல்வர் சொன்ன படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்.
மதத்தின் பெயரால் மக்களை பாஜக பிளவுப்படுத்து கிறது. உலக அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்த இந்தியாவை, முதல்வர்களை கைது செய்ததால் அமெரிக்கா கேள்வி கேட்கிறது. பாஜகவை எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை. அடிப்படை உரிமைகளை பாஜக அரசு மறுக்கிறது என்று பேசினார்.