செய்யாறு நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் வருமானவரி துறையினர் திடீர் சோதனை: பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

செய்யாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சோதனை முடிந்து
பைகளுடன் வெளியேறிய வருமானவரித் துறையினர்.
செய்யாறு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சோதனை முடிந்து பைகளுடன் வெளியேறிய வருமானவரித் துறையினர்.
Updated on
1 min read

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பங்களாத் தெருவில்நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மற்றும் அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பணம்பதுக்கி வைத்துள்ளதாக வருமானவரித்துறைக்கு புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்பேரில், 30-க்கும்மேற்பட்ட வருமான வரித்துறையினர், செய்யாறு நகரில் நேற்று முன்தினம் பிற்பகலில் குவிந்தனர். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

பின்னர், நெடுஞ்சாலைத் துறைஉயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையை தொடங்கினர். அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர்.ஆவணங்கள், கணினியில் பதிவான விவரங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினர். நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களின் விவ ரங்கள் சேகரிக்கப்பட்டன.

பிற்பகல் 3 மணியளவில் தொடங்கிய சோதனை நள்ளிரவு 1 மணிவரை நடைபெற்றது. பின்னர் 4 கனமான பைகளுடன் வருமான வரித்துறையினர் வெளியேறினர். இந்த பைகளில் பணம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, அதே பகுதியில் உள்ளமெக்கானிக் கடை, கூரியர் நிறுவனம், செல்போன், ஜெராக்ஸ் கடை உட்பட 7 கடைகள் மற்றும்2 வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அந்த இடங்களில் சில முக்கிய குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், செய்யாறில் உள்ள நெடுஞ்சாலைத் துறைஅலுவலகம் மற்றும் அலுவலகத் துக்கு தொடர்புடையதாக கூறப்படும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, செய்யாறில்உள்ள துணிக்கடை மற்றும் பேன்சி ஸ்டோரிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in