Published : 02 Apr 2024 06:25 AM
Last Updated : 02 Apr 2024 06:25 AM

புதுச்சேரி பல்கலை. நடத்திய நாடகத்தில் ராமாயண கதாபாத்திரங்களை ஆட்சேபகரமாக சித்தரித்ததாக போலீஸார் வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய வகையில் ராமாயண கதாபாத்திரங்களை வைத்து நாடகம் நடத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறையை கண்டித்து போராட்டம் நடத்திய ஏபிவிபி மாணவ கூட்டமைப்பினர்.

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைநடத்திய நாடகத்தில், ராமாயணகதாபாத்திரங்களை ஆட்சேபகரமான முறையில் சித்தரித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பு போராட்டம் நடத்தியது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத் துறை சார்பில் உலக நாடக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘எழினி 2கே 24’ நிகழ்வில் ‘சோமாயணம்’ என்ற தலைப்பில் நாடகம் நடந்துள்ளது. இதில் ராமாயண கதாபாத்திரங்களை அவமதிக்கும் வகையில் கதையும், கதாபாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘இந்து மதத்தின்நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் நாடகம் போடப்பட்டுள்ளது. நாடகத்தை அரங்கேற்றிய நிகழ்கலைத் துறையை கண்டிக்கிறோம்.ஒரு மதத்தின் நம்பிக்கையை இழிவுபடுத்துவதன் மூலம் வகுப்புவாதத்தை தூண்ட முயன்றுள்ளனர்.

நாடகத்தின் எழுத்தாளரும், இயக்குநருமாகச் செயல்பட்டவரை இடைநீக்கம் செய்ய வேண்டும். நாடகத்தை அனுமதித்த துறைத் தலைவர், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றனர்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறும்போது, ‘‘நாடகத்தின் எழுத்தாளர் - இயக்குநர் உட்படசம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். போலீஸார்விசாரணையைத் தொடங்கியுள்ளனர்’’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் மத்திய பல்கலை.தரப்பில், ‘‘நிகழ்கலைத் துறை மாணவர்களால் நடத்தப்பட்ட நாடகம்குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பது அவசியம்’’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x