Published : 02 Apr 2024 04:04 AM
Last Updated : 02 Apr 2024 04:04 AM

“மோடி குறித்து யாரும் தவறாக பேசினால் சும்மா விடக்கூடாது” - நடிகை ராதிகா

திருத்தங்கல்லில் நடந்த பாஜக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் விருதுநகர் தொகுதி வேட்பாளர் ராதிகா பேசினார்.

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பாஜக கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, அவரது கணவர் சரத்குமார் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ராதிகா பேசிய தாவது: அரசியல் எனக்கு புதிதல்ல. நான் பல ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். தோனி சிக்ஸர் அடிப்பது போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்து வருவதால் அனைவருக்கும் பயம் வந்து விட்டது. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மனதில் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

எதிரிகளை குறைவாக எடை போடக் கூடாது. நடிகர்கள் என்ற முறையில் என்னையும், சரத் குமாரையும் மக்கள் பார்க்க வருவார்கள். அதை வாக்குகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். மோடி குறித்து யாரும் தவறாக பேசினால் சும்மா விடக்கூடாது. நீங்கள் அனைவரும் எனக்கு சகோதரர்களாக இருந்து, எனது வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று பேசினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை மற்றும் கிளி ஆகியவற்றை ராதிகாவுக்கு, தொண்டர்கள் பரிசளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x