

வேலூர்: கச்சத்தீவை கடந்த 10 ஆண்டு களில் மீட்காமல் பிரதமர் நரேந்திரமோடி தேர்தலுக்காக நாடகமாடு கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஆர்.முத்தரசன் வேலூர் சாயிநாதபுரம், விருப்பாட்சி புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘மத்திய பாஜக அரசு மதசார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கி, நீதிமன்றங்கள், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் போன்ற அனைத்தையும் எதிர்க்கட்சி களுக்கு எதிராக முடுக்கிவிடப்படு கின்றன. வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, தேர்தல் ஆணை யம் ஆகிய சட்ட அமைப்புகள் அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சியில் சீர்குலைந்து விட்டன.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்ற பிறகு தேர்தல் அதி காரியாக நியமிக்கப்படுகிறார். சில நாட்களில் ராஜினாமா செய்கிறார். தேர்தல் ஆணையம் முழுமையாக பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதமர் நிர்ணயித்த தேதியில்தான் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதிலும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி காங்கிரஸ் கட்சி முடக் கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அபராதம், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அபராதம் என எதிர்க் கட்சிகளை எல்லாம் முடக்கி ஒரேநாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு என கடைசியில் ஒரே கட்சி என்பார்கள்.
அதனால், இந்த 18-வது மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் போன்றது. இந்த தேர்தலில் பாசிசம் தோற் கடிக்கப்பட்டு, இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கும், பாஜக வுக்கும் தொடர்பில்லை என கூறுகிறார். ஆனால், நாகை மீனவர் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட திமுக, அதிமுக ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பி அதனை ஆளுநர், குடியரசு தலைவருக்கும் அனுப்பினார்.
ஆனால், குடியரசு தலைவரோ மத்திய அரசு சார்பில் ஜெயலலிதா பெயரை சூட்ட முடி யாது என பதிலளித்துள்ளார். இதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. இதன்மூலம், ஒன்று கள்ளக்கூட்டணி, மற்றொன்று நள்ளிரவு கூட்டணி என்பது தெளிவாகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி ஒரே அணியாக இருந்தபோது 39 தொகுதிகளில் வென்றது. இப்போது, எதிர்க் கட்சிகள் தனித்தனியாக மோதும் நிலையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
போதைப்பொருட்கள் இறக்கு மதி செய்வதற்கான தாயகமே குஜராத்தான். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410-ஆக இருந்தது. தற்போது ரூ.1,200 ஆக உள்ளது. ஆனால், அண்மையில் உயர்த்தப்பட்ட வர்த்தக சிலிண்டர் தற்போது ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நாடகமாகும். அதேசமயம், பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு அளித்ததில் திமுக இரட்டை வேடமிடுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்கு தந்தவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. ஆனால் அவர், அப் போதைய முதல்வரிடம் இது குறித்து கேட்கவில்லை. இப்போது கச்சத்தீவு குறித்து பேசும் பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 10 ஆண்டுகால அவரது ஆட்சியிலேயே மீட்டிருக்கலாம்.
தமிழக மீனவர்களையும், படகுகளையும்கூட அவரால் காப்பாற்ற முடியவில்லை. தேர்தலுக் காக மட்டுமே நாடகமாடி வருகிறார். காலாவதியான சுங்கச் சாவடிகளை மூடவேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சுங்கச் சாவடிகளை மூடாமல் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளது’’ என்றார்.