கல்பாக்கம் அணுமின் நிலைய விபத்தில் வடமாநிலத்தவர் உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் எப்ஆர்எப்சி எனப்படும் மறுசுழற்சி மையத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், புதிதாக எப்ஆர்எப்சி எனப் படும் மறுசுழற்சி முறையில் அணு மின்சாரம் தயாரிப் பதற்கான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகளில், பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த நபர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த மையத்தின் கட்டுமான பணியில் சாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த ஜார்க் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டா சூன்(43) என்பவர், மேலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், காயமடைந்த அவரை சக தொழி லாளர்கள் மீட்டு சதுரங்கப்பட்டினம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த கல்பாக்கம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in