Published : 01 Apr 2024 04:10 AM
Last Updated : 01 Apr 2024 04:10 AM

“85 வயதிலும் பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்” - ராமதாஸ் உருக்கம்

ஆரணி அடுத்த களம்பூரில் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதிரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ்.

திருவண்ணாமலை: தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று மோடி 3-வது முறையாக பிரதமராவது உறுதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ் குமாரை ஆதரித்து திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூரில் நேற்று இரவு நடை பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத் தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப்போகிறது. இதில், கணேஷ்குமார் வெற்றியும் முக்கியம். செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்து போராளியாக கணேஷ் குமார் திகழ்ந்தார்.

3 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க முயற்சி செய்கின்றனர். தரிசு நிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். விவசாய நிலங்களை தான் எடுப்பேன் என அடம் பிடிக்கக் கூடாது. செய்யாறு சிப் காட் தொடர்பாக 10 அறிக்கையை வெளி யிட்டுள்ளேன். இதன் பிறகு தான், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிப் காட் வேண்டும்தான், வேலை வாய்ப்பு பெருக வேண்டும். இதற்காக விவசாய நிலங்களை பறித்து, விவசாயிகளை அப்புறப்படுத்தக் கூடாது.

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது, நல்ல அரசுக்கு அழகல்ல. 361 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆரணி தொகுதியில் கடந்த முறை மக்களவை உறுப்பினராக இருந்தவருக்கு, தொகுதி ஒதுக்க வில்லை. இதனால் கடலூரில் போட்டியிடுகிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டால், நியாயவிலை கடையில் 40 சதவீதம் பேர், இவர்கள் தான் வேலை செய்கின்றனர் என இந்த மாவட்டத்தின் அமைச்சர் கூறுகிறார்.

எடை போடுவது, மூட்டை தூக்கும் தொழிலில் ஈடுபடு வதை குறிப்பிடுகிறார். முதல்வர் ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து 10.5 சதவீதத்தை வலியுறுத்தி 35 நிமிடம் பேசினேன். செஞ்சியிலும் ஒரு பெரிய அமைச்சர். இந்த இரண்டு அமைச்சர்களையும் எதிர்த்து, கணேஷ் குமார் வெற்றி பெறுவது உறுதி. போராளியாக உள்ள கணேஷ் குமாரை ஆதரித்து 85 வயதிலும், பிரச் சாரம் செய்ய வந்துள்ளேன். மாம் பழத்துக்கு வாக்களியுங்கள்.

நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக வரப்போகிறார். கணேஷ் குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வார் என்பது எனது கணிப்பு. பாமக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால், விவசாய நிலங்கள் பறிபோகும். விவசாயம் செழிக்காது. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி, மக்களவைத் தேர்தல் மூலமாக கணிக்கப்படும்” என்றார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராளியாக உள்ள கணேஷ்குமாரை ஆதரித்து 85 வயதிலும், பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x