

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள தனியார் மதுபான விடுதியில் கடந்த 28-ம் தேதி இரவு கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு பணி செய்து வந்த மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (22), லல்லி (24), திண்டுக்கல்லை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விடுதி மேலாளர் சதீஸை கைது செய்தனர். தலைமறைவான விடுதி உரிமையாளர் உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், விடுதி உரிமையாளர் அசோக்குமாரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.