Published : 31 Mar 2024 07:51 AM
Last Updated : 31 Mar 2024 07:51 AM
கடலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதிபாஜக வேட்பாளர் கார்த்தியாயி னியை ஆதரித்து, பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை சிதம்பரத்தில் நேற்று பிரச்சாரம் மேற் கொண்டார்.
அவர் பேசியதாவது: சிதம்பரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தி யாயினி மாற்றத்தை கொடுக்க போட்டியிடுகிறார். இங்கு கூடியுள்ளவர்களின் நோக்கம் திருமாவ ளவனை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதே.
விசிக என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது தான் விழுப்புரம், சிதம்பரம் கட்சி எனத்தெரிகிறது. இத்தொகுதி களில் மட்டும் போட்டியிடுகிறார்கள்.
பொதுத் தொகுதியை பெறு வதற்கு திருமாவளவன் திமுகவிடம் மன்றாடினார், கிடைக்கவில்லை. திமுக இவர்களை அவமானப்ப டுத்தியுள்ளது. சமூகநீதி பற்றி திமுக பேசுவது பொய்யானது. இவர்களை சிதம்பரம், விழுப்பு ரம் தொகுதியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
திமுக கூட்டணியினர், பிரதமர் வேட்பாளர் யாரென்று தெரியாமல் உள்ளார்கள். ஆனால் நாம், பிரதமர் யாரென்று முடிவு செய்து வாக்களிக்க உள்ளோம்.
எதிர்க்கட்சியினரையும் விடா மல் அவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.அவர்களும் வாக்களிக்க தயாராகஉள்ளனர். மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட் டுள்ளது.
பெண்களுக்கு வழங்கும் சலுகைகளை திமுக அமைச்சர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள். திருமாவளவன் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத் துகிறார். இவர்களை தோற் கடிக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளைக் கொண்டது திமுகவின் தேர்தல் அறிக்கை. கடலை மடிக்கத்தான் அது பயன் படும்.
மோடி ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை செய்துள்ளார். ராமர் கோயிலை கட்டியுள்ளனர். ஆன்மிக சுற்றுலா ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி இங்குள்ள மக்களை இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா அழைத் துச் செல்ல உறுதியாக உள்ளார். 100 நாள் வேலையில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருமாவளவன் சனாதனத்தை ஒழித்துக்கட்டுவோம் என்கிறார்; பாஜக அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்கிறார். இப்படி பேசிஅவர் இந்திய அளவில் காமெடிய னாக உள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் எந்தவளர்ச்சியும் இல்லை. ஜனநாயகத்துக்கு எதிராக நடக்கும் திருமாவளவன் மீண்டும் இத்தொகு தியில் போட்டியிடுகிறார். அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என் றார். இந்தப் பிரச்சாரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மருதை உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT