தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 1500 ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 1500 ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1500 ஊழியர்களிடம் பயிற்சியில் பங்கேற்காதது ஏன் என்று விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 726வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் சட்டப்பேரவை தொகுதிகள் அளவில் 16 இடங்களில் கடந்த 24-ம்தேதி முதற்கட்ட தேர்தல்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில் சுமார் 1500பேர் பயிற்சிக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.

இன்றும் பயிற்சி: அவர்கள் பயிற்சியில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்காதவர்களுக்கு இன்று நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in