

சென்னை: “திமுகவின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்” என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலமாக உரையாடவுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, “இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி ஆப் வாயிலாக எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பாஜக தொண்டர்களுடனான ‘எனது பூத் வலிமையான பூத்’ உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகம் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.