

க மாநிலங்களகடலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியபடியே வந்து, “ஆகவே கடலூர் தொகுதியில் போட்டியிடும் நமது தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்” என்றார்.
பதறிப்போன பக்கத்தில் இருந்த அதிமுக நிர்வாகி ஒருவர், “அண்ணே, பம்பரம் கிடையாது; முரசு சின்னம்” என்று கூற சுதாரித்துக் கொண்ட சி.வி.சண்முகம், “முரசு, முரசு” என திருத்திக் கூறி சமாளித்தார்.