

கோவை: கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவையில் சிறு குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. பாஜக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கோவைக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
லூலு மால் கோவைக்கு வராது என்றும், எம்எல்ஏ ஒதுக்கீட்டில் நான் கல்லூரியில் சேர்ந்ததாகவும் அண்ணாமலை பொய் பேசியுள்ளார். அண்ணா மலை வேட்பு மனு விதிமீறல் குறித்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், ஆளும்கட்சியான திமுகவினர் வாய் திறக்காமல் உள்ளனர்.
எல்லாம் தெரிந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு சாதாரண படிவத்தைக் கூட பூர்த்தி செய்ய தெரியவில்லை. இது அண்ணா மலையின் தோல்வி பயத்தைக் காண்பிக்கிறது. சட்ட ரீதியாக அவரது வேட்புமனு செல்லாது. அண்ணாமலைக்கு வாக்களித்தால் செல்லாத வாக்கு தான், என்றார்.