

சென்னை: தமிழக பதிவுத்துறையில் ஸ்டார்மென்பொருள் அறிமுகப்படுத்தப் பட்டது முதல், பதிவுக்கு டோக்கன்வழங்கி அதன் மூலம் விரைவாகநடைபெற வழிவகை செய்யப்பட் டுள்ளது.
இதுதவிர பதிவு செய்த அன்றே ஆவணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான விசேஷ நாட்கள், அதிகளவில் பதிவு நடைபெறும் நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ம்தேதி சனிக்கிழமையன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.