

விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை அறிமுகம் செய்யும் கூட்டம், பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாமக நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கும் போது, பாமக மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் அங்காளம்மன், பாரத மாதா, குறி சொல்லும் பெண் என வேடங்களை அணிந்துகொண்டு மேடையை நோக்கி வந்தனர்.
அப்போது அங்காளம்மன் அருள் கூறுவது போல அம்மன் வேட மணிந்த பெண் பேசுகையில், “பாமக வேட்பாளர் முரளி சங்கர் உட்பட நாடு முழுவதும் சுமார் 400 பேர் வெற்றி பெறுவார்கள். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார்” எனக்கூறி வேட்பாளர் தலையில் எலுமிச்சை பழத்தை வைத்து அருளாசி வழங் கினார்.