

கடலூர்: கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் நேற்று மஞ்சக் குப்பத்தில் வர்த்தக சங்கத்தினர், ஜெயின் சங்கத்தினர், இஸ்லாமியர் ஜமாத்தார்கள், மீனவ சமுதாய தலைவர்கள், தங்க நகைக் கடை உரிமையாளர்கள், ஜவுளிக் கடை உரிமையாளர்கள், தனியார் பள்ளி தாளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
இதைத் தொடர்ந்து மஞ்சக்குப்பம் திருப்பாதிரிபுலியூர் கடை வீதிகளில் கடை, கடையாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடை வீதியில் பார்த்த பலர் இவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் கடை வீதியில் வேட்பாளர் தங்கர் பச்சான் பல பெண்களிடம் நலம் விசாரித்து நாட்டு நடப்பை கேட்டார். பாமக மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன், மாநில நிர்வாகி பழ தாமரைக் கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.