Published : 11 Feb 2018 07:03 AM
Last Updated : 11 Feb 2018 07:03 AM

தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் பற்றி வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்

‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் புகழ்பெற்ற தமிழ் ஆளுமைகளைப் பற்றி கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை வள்ளுவர், இளங்கோ, கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், பாரதி, உ.வே.சா, பாரதிதாசன், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றியுள்ளார்.

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து தனது 13-வது கட்டுரையை அரங்கேற்றிய வைரமுத்து, 14-வது ஆளுமையாக மறைமலையடிகளைப் பற்றி எழுதியுள்ளார். இக்கட்டுரையை வரும் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் அவர் அரங்கேற்றவுள்ளார்.

தமிழின் தவிர்க்க முடியாத பேராளுமைகளை இளைஞர்களுக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் கட்டுரைகளை அரங்கேற்றி வருகிறார். காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவுக்கு உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் நாகமுத்து தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகிக்கிறார்.

வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், வெங்கடேஷ், ராஜசேகர், காதர் மைதீன், தமிழரசு, மாந்துறை ஜெயராமன், சாந்தி தணிகாசலம், கலைமதி ஆனந்த், விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x