“விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” - ஓ.பி.ரவீந்திரநாத்

“விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” - ஓ.பி.ரவீந்திரநாத்
Updated on
1 min read

தேனி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், “திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்தகாலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார்.

தேனி மக்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமானவர். அவர் எம்.பியாக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்றவர். நான் வேறு அவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. இதன் காரணமாகவே டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதியை விட்டுக் கொடுத்தோம்.

ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அடுத்தகட்ட முயற்சியாக அரசியல் கட்சி தொடங்கி அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி தயாராகி விட்டார்.

அந்தப் பாதையில் அவர் பயணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in