சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் மகள் போட்டி - அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

சிவகங்கை மக்களவை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் சுயேச்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்த தனலட்சுமி.
சிவகங்கை மக்களவை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் சுயேச்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்த தனலட்சுமி.
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடா சலம் மகள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகங்கையில் அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மகள் தன லெட்சுமி நேற்று திடீரென சுயேச்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவர் தமிழ் முத்தரையர் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவராக உள்ளார். பிளஸ் 2 வரை படித்துள்ளார். ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் இவரது தந்தை வெங்கடாசலம் 1984-ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் 1996-ல் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். மீண்டும் 2001-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். இதனால் அவரது குடும்பத்துக்கு ஆலங்குடி தொகுதியில் செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில் அவரது மகள் தனலெட்சுமி சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவது மாவட்ட அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in