திருவள்ளூர் | டிபன் கடையில் பூரி சுட்டுக் கொடுத்து பாஜக வேட்பாளருக்கு ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு

சிறுவாபுரி டிபன் கடையில் பூரி சுட்டுக் கொடுத்து, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
சிறுவாபுரி டிபன் கடையில் பூரி சுட்டுக் கொடுத்து, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
Updated on
1 min read

திருவள்ளூர்: சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே டிபன்கடையில் பூரி சுட்டுக் கொடுத்து,திருவள்ளூர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்

திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் பாஜக சார்பில், பொன். வி.பாலகணபதி போட்டியிடுகிறார். அவருக்கு நேற்று வாக்குசேகரிப்பதற்காக, பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். அப்போது, அவர் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, கோயில் அருகேபேருந்தில் பயணித்த பயணிகளிடம் பாஜக வேட்பாளர் பொன். வி.பாலகணபதிக்கு ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தார். பிறகு, அப்பகுதியில் உள்ள டிபன் கடை ஒன்றுக்கு சென்ற ஜி.கே.வாசன், பூரி சுட்டுக் கொடுத்து கடை உரிமையாளரிடம் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது:

மோடி ஆட்சியின் 10 ஆண்டுதொடர் சாதனையே, மக்களவைதேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். திருவள்ளூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in