

கோவை: கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம் கோனியம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு கோவைப் புதூரை சேர்ந்த ரவி - தேவிகா ஆகியோருக்கு திருமண நிகழ்வு நடைபெற்றது. புதுமண தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி வீர கணேசனின் அம்மாவிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை அண்ணாமலை தாக்கல் செய்தார். இதில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏ சின் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.