

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்து சென்னை கட்சி அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் மகளிருக்கு ரூ.3000 உரிமைத் தொகை, நீட் விலக்கு, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் எனப் பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். சமூக நீதி: 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.
மாநிலத் தன்னாட்சி
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைச் சட்டம்
வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு சுரங்கம் இல்லா மாநிலம்
அணுஉலை இல்லா தமிழகம்
நதிகள் இணைப்புத் திட்டம்
மேகேதாட்டு அணைக்குத் தடை
தமிழக ஆறுகள் தூய்மைப்படுத்துதல் திட்டம்
தமிழ்நாட்டில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
மகளிருக்கு மாதம் ரூ.3,000
குழந்தைகளுக்கான நீதி
கல்வி
உயர் கல்வி
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு
அனைவருக்கும் இலவச மருத்துவம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு
மாநிலங்களுக்கு மதுவிலக்கு மானியம்
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
தொழில்துறை வளர்ச்சி
தொடர்வண்டித் திட்டங்கள்
மின் திட்டங்களுக்கு நிதியுதவி
தமிழ் ஆட்சிமொழி
உள்ளாட்சி & கிராமப்புற வளர்ச்சி
ஈழத் தமிழர்களுக்கு நீதி
வெளிநாடுவாழ் தமிழ் நலன்
தேர்தல் சீர்திருத்தங்கள்
விளையாட்டு
பன்முகத் தன்மை
சிறுபான்மையினருக்கு மக்கள்தொகைப்படி இடஒதுக்கீடு
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்இடஒதுக்கீடு
புதுவைக்கு மாநிலத் தகுதி
இவ்வாறாக பல்வேறு தலைப்புகளின் கீழும் வாக்குறுதிகளை பாமக வழங்கியுள்ளது. பாமக தேர்தலை பாஜக கூட்டணியுடன் இணைந்து எதிர்கொள்கிறது. 10 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாம்பழம் சின்னத்தில் பாமக தேர்தலில் போட்டியிடுகிறது.
வேட்பாளர் பட்டியல்...