

ராமநாதபுரம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனிக்கு ரூ.76.13 கோடி மதிப்பிலான சொத்து, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு ரூ.2.64 கோடி சொத்து உள்ளதாக தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியின் சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: ரூ.12,56,987, மனைவி பர்வீன் ரூ.1,89,450.
நவாஸ்கனி குடும்பத்தினர் பெயரில் அசையும் சொத்து ரூ11.36 கோடி, அசையா சொத்து ரூ.64.77 கோடி என மொத்தம் ரூ.76.13 கோடி உள்ளதாக குறிப் பிட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் தனது கையிருப்பாக ரூ.5 லட்சமும், மனைவி ஜெயா கையிருப்பாக ரூ.4 லட்சம். மேலும் இருவர் பெயரில் அசையும் சொத்தாக ரூ.88.64 லட்சம், அசையா சொத்தாக ரூ.1.18 கோடி என மொத்தம் ரூ.2.64 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் இரண்டு கார்களும், ஒரு பைக்கும் அடங்கும்.