மருத்துவ கல்லூரிகள் போலி கடிதங்களை நம்ப வேண்டாம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் பெயரில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் போலியான கடிதங்களை நம்ப வேண்டாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை கல்வி வாரிய தலைவர் சாம்பு சரண் குமாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய அவர் கையெழுத்திட்ட கடிதம்சில மருத்துவக் கல்லூரிகளுக்குவந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிகளுக்கான அறிவுறுத்தல்கள் குறித்த கடிதம் அனைத்தும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இமெயில் முகவரியில் மட்டுமே அனுப்பப்படும்.

அதேபோல், அதுகுறித்தவிவரங்களும் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். அதுதொடர்பான தகவல்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இவைதவிர, தனிப்பட்ட முறையிலோ அல்லது வேறு வழிகளிலோ வரும் போலி அங்கீகாரக் கடிதங்களை நம்ப வேண்டாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in