

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது நாம்தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி,சர்ச்சைக்குரிய வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை தொகுதிக்குவேட்புமனுக்கள் பெறப்பட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்எழிலரசி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷா அஜித்திடம் நேற்றுவேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் உறுதிமொழிப் படிவத்தை வாசித்தபோது, படிவத்தில் இடம்பெறாத ‘தமிழ் மீதும்’‘பிரபாகரன் மீதும்’ என்ற வாசகங்களைக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். எழிலரசிக்கு மாற்று வேட்பாளராக இந்துஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தொகுதிக்கு சுயேச்சைகளாக பழனியப்பன், அக்குபஞ்சர் மருத்துவர் செல்வராஜ், கலைச்செல்வன் என 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.