Published : 27 Mar 2024 06:15 AM
Last Updated : 27 Mar 2024 06:15 AM

சென்னையின் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திருவிக நகர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளராக கார்த்திகே தன்ஜிபுத்தப்பாட்டி, காவல் பார்வையாளராக உதய் பாஸ்கர் பில்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும்ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளராக டாக்டர் டி.சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும்சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளராக முத்தாடா ரவிச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை மற்றும் தென்சென்னை தொகுதிகளுக்குட்பட்ட 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான காவல் பார்வையாளராக சஞ்சய் பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044 2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) செல்போன் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x