

சென்னை: பொது விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி, நிறும வரி செலுத்துதல் மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக மார்ச் 29, 30, 31 ஆகிய பொது விடுமுறை நாட்களில் சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறை இயங்கும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.