

சிவகங்கை: சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பெயரில் மொத்தம் ரூ.30.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.24.73 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி ஸ்ரீநிதி பெயரில் ரூ.12.26 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.29 கோடி மதிப்பில் அசையா சொத்துகள் உள்ளன.
இதில் கார்த்தி சிதம்பரத்திடம் கையிருப்பாக ரூ.3.11 லட்சம், ரூ.2.44 லட்சம் மதிப்பிலான 40 கிராம் தங்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 கேரட் வைரம் வைத்திருக்கிறார். மேலும் அவரது பெயரில் வாகனங்களே இல்லை.
அதேபோல் மனைவி ஸ்ரீநிதியிடம் கையிருப்பாக ரூ.5.10 லட்சம், ஒரு இருசக்கர வாகனம், ஒரு கார் உள்ளது. மேலும் ரூ.53.86 லட்சம் மதிப்பிலான 1,727.846 கிராம் தங்கம், ரூ.11.83 லட்சம் மதிப்பிலான 40.738 கேரட் வைரம், ரூ.23.06 லட்சம் மதிப்பிலான 28.721 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. மேலும் கார்த்தி சிதம்பரம் பெயரில் ரூ.12.32 கோடி கடன், ஸ்ரீநிதி பெயரில் ரூ.11.16 கோடி கடன் உள்ளது.
சிவகங்கை அதிமுக வேட்பாளருக்கு ரூ.6.66 கோடி சொத்து: சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.6.66 கோடி மதிப்பி லான சொத்துகள் உள்ளன. சேவியர் தாஸுக்கு ரூ.91.90 லட்சம் மதிப்பிலான அசையும்சொத்துகள், ரூ.5.74 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது மனைவி மரிய திருஷ்டி ராதிகாவுக்கு ரூ.97.12 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன.