புதுச்சேரி பாஜக, அதிமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு

புதுச்சேரி பாஜக, அதிமுக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து- ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ. 3 கோடியே 7 லட்சத்து 460. மொத்தமதிப்பு- ரூ. 10.22 கோடி. கடன் ரூ.6.94 கோடி.

மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ. 1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ. 11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ. 1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். மொத்தமதிப்பு ரூ. 13.96 கோடி. கடன் ரூ. 8 .99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ. 1.58 கோடி.

2024 டிசம்பரில் வாங்கிய கார்! - மேலும், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் மனைவி வசந்தியின் சொத்து பிரமாணத்தில், 2024 டிசம்பர் மாதத்தில் ரூ. 1 கோடி 4 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தனின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சத்து 92 ஆயிரத்து877 உள்ளது. கடன் ரூ.1.24 கோடிஉள்ளது. அவரது மனைவி நிவேதித்யாவுக்கு அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230, அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம் உள்ளது. வீட்டுகடனாக ரூ.28 லட்சம் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in