சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கோரிய வழக்கில் தீட்சிதர்கள் பதிலளிக்க கெடு

சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கோரிய வழக்கில் தீட்சிதர்கள் பதிலளிக்க கெடு
Updated on
1 min read

சென்னை: சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நதி உள்ளது. இந்த கோயிலில் சைவ மற்றும் வைணவ பிரிவினருக்கிடையே சுமூகமான சூழல் இல்லாததால் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. எனவே இந்த கோயிலில்பிரம்மோற்சவத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்,அறநிலையத் துறை வரும் மே20, 21 ஆகிய நாட்களில் பிரம்மோற்சவத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொது தீட்சிதர்கள் குழு தரப்பில், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பிரம்மோற்சவத்தை இப்போது நடத்தக் கூடாது.இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினர்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பொது தீட்சிதர்கள் தரப்பில் ஏப்.25க்குள் பதிலளிக்க கெடு விதித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in