Published : 26 Mar 2024 07:08 AM
Last Updated : 26 Mar 2024 07:08 AM

உதகைக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் ரூ.69,000 பறிமுதல்: பெண் கதறி அழுததால் திரும்ப ஒப்படைத்த பறக்கும் படை!

பஞ்சாபில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ.69,400-ஐ பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.

குன்னூர்: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ.69 ஆயிரத்து 400 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், பணத்தை திருப்பிக் கேட்டு பெண் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து காரில் உதகைக்கு ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்களிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.69,400 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண், உதகைக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இங்குள்ள தேர்தல் நடைமுறை தெரியாது.

இப்போது கையில் செலவுக்குகூட பணமில்லை. அதனால், எங்களது பணத்தை திரும்பக் கொடுங்கள் எனக் கேட்டு கதறி அழுதார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர் களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x