

உதகை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீலகிரி மக்களவை தொகுதியில் பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.1.47 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மக்களவை தொகுதியில் வாகனத் தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உரிய ஆவணங்களின்றியும், உரிய ஆதாரங்களின்றியும் கொண்டு செல்லப்படும் ரொக்கம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட சோதனையில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 500, கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.51 லட்சத்து 18 ஆயிரத்து 400, குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 870 என, நீலகிரி மாவட்டத்தில் ரூ.74 லட்சத்து ஆயிரத்து 770 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பவானி சாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238, மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 800, அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.16 லட்சத்து 36 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 84 ஆயிரத்து 808 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.