Published : 25 Mar 2024 04:06 AM
Last Updated : 25 Mar 2024 04:06 AM

குமரியில் காங். வேட்பாளராக மீண்டும் களம் காணும் விஜய் வசந்த்!

விஜய் வசந்த்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் 10-வது முறையாக களம் இறங்குகிறார். அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத்தும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மரிய ஜெனிபரும் போட்டியிடு கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் விஜய் வசந்த்தை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இவர் முன்னாள் எம்பியும், தொழிலதிபருமான மறைந்த வசந்த குமாரின் மகன் ஆவார்.

இவரது சொந்த ஊர் அகஸ்தீஸ்வரம். விஜய் வசந்த்துக்கு நித்யா விஜய் என்ற மனைவியும், அஹன் விஜய் என்ற மகனும், திஷ்யா விஜய் என்ற மகளும் உள்ளனர். விஜய் வசந்த் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். சென்னையில் பட்டப் படிப்பை முடித்த இவர், லண்டனில் எம்ஐபிஏ படித்தவர். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார்.

சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஒரு சகோதரரும், சகோதரியும் உள்ளனர். விஜய் வசந்த் எம்பியின் தந்தை வசந்த குமார் 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட்டு எம்பியான நிலையில், கரோனா தொற்று காலத்தில் மரணம் அடைந்தார். இதனால் காலியான கன்னியாகுமாரி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் களம் காண்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x