Published : 24 Mar 2024 06:56 AM
Last Updated : 24 Mar 2024 06:56 AM

விருதுநகர் அருகே ரங்கோலி திருவிழா: வாக்காளர் விழிப்புணர்வுக்காக 10 ஆயிரம் கோலம்

விருதுநகர்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 750 இடங்களில் ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் 1,000 கோலமிட்டனர்.

ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் 750 இடங்களில் `100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம்' என்பதையும், `என் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்பதையும் வலியுறுத்தி, ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்று, ஒரே நேரத்தில் 10 ஆயிரம் கோலமிடும் மாபெரும் ரங்கோலி திருவிழா நேற்று நடைபெற்றது.

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம், ஆமத்தூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, `எனது வாக்கு எனது எதிர்காலம்', `விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்', `எனது வாக்கு விற்பனைக்கு அல்ல', `ஒரு வாக்கின்வலிமை தேசத்தின் உரிமை', `போடுவோம் ஓட்டு - வாங்கமாட்டோம் நோட்டு' என பல்வேறு தேர்தல்விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணமயமான கோலங்கள்போடப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் இந்தரங்கோலித் திருவிழவை பார்வையிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x