Published : 23 Mar 2024 06:10 AM
Last Updated : 23 Mar 2024 06:10 AM
சென்னை: பொன்னேரி-மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.30, 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை, வரும் 25, 26-ம் தேதிகளில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை 25, 26-ம் தேதிகளில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை 27-ம் தேதியன்று மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் மீஞ்சூரில் இருந்தும், கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை 25, 26-ம் தேதியன்று மீஞ்சூரில் இருந்தும், சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை 25, 26-ம் தேதிகளில் எண்ணூரில் இருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT