Published : 03 Feb 2018 08:12 AM
Last Updated : 03 Feb 2018 08:12 AM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி மலைப் பிரதேசங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகையில் 7.2, வால்பாறையில் 8.4, குன்னூரில் 9, கொடைக்கானலில் 11.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப்பகுதிகளை பொறுத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலையில் மிகக்குறைந்த அளவாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 12, தருமபுரியில் 13, வேலூரில் 14.3, கரூர் பரமத்திவேலூரில் 14.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT