“அதிகார அத்துமீறலைத் தடுக்க...” - பொன்முடி பதவியேற்புக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் கருத்து

அமைச்சர் பொன்முடி பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கினார்
அமைச்சர் பொன்முடி பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: "அரசியல் சட்டத்தின் காவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அரசியல் சட்டத்தின் காவலரான உச்ச நீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகச் சிதைவையும், கூட்டாட்சியின் மறைவையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டுக்கு முன் கூர்முனைகளை இடும் தவறான சாகசங்களையும், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டதையும் இந்திய மக்கள் கண்டு வருகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தல் மக்களாட்சியைக் காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் மிக முக்கியமானது. நமது புகழ்மிகு நாட்டை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார அத்துமீறலைத் தடுக்கக் கடுமையாகப் பாடுபடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். | விரிவாக வாசிக்க > பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு: ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in